ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – 22 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் வடமேற்கு மாகாணமான பாட்கிஸ் பகுதியில் 4.9 மற்றும் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் சங்கத்தின் தகவல் தெரிவிக்கின்றன.

மாகாண தலைநகரத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தில், 700க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தற்போது வரை குறைந்தபட்சம் 22 பேர் உயிரிழந்துள்ளதக தெரிவிக்கின்றன.

முதல் நிலநடுக்கம் தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு 2வது நில நடுக்கமும் ஏற்பட்டது. காதிஸ் மற்றும் முகர் மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கங்களால், ஆப்கானிஸ்தானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும், அங்கு பல குடியிருப்புகள் உறுதியானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE