ஹாமிடன் நகரின் நோர்போக் கவுண்டியில் வார இறுதியில் 100,000 டொலர் மதிப்பிலான சாக்லேட் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவலில், ஹெர்ஷே மற்றும் ஃபெரெரோ ரோச்சர் சாக்லேட் நிறைந்த டிரக் மற்றும் டிரெய்லரை சந்தேக நபர்கள் திருடிச் சென்றனர் என குறிப்பிட்டுள்ளனர். ஒன்ராறியோ பிராந்திய பொலிசார் தற்போது விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். நோர்போக் கவுண்டியில் விக்டோரியா சாலையில் அமைந்துள்ள ஒரு அங்காடிக்கு அனுப்பப்பட்ட டிரக் மற்றும் டிரெய்லரையே மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட இச்சம்பவத்தில், திருடு போன சாக்லேட்டின் மொத்த மதிப்பு 100,000 டொலர் என தெரிய வந்துள்ளது. பீல் பொலிசார் வெளியிட்ட தகவலில் திருடு போனதாக கூறப்பட்ட டிரக் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் சாக்லேட் மாயமாகியுள்ளது என்றனர். தற்போது அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கமெரா பதிவுகளை பொலிசார் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.