ரஷ்யாவில் 2,300 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடம்!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,141 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதோடு 1,064 பேர் தொற்றால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் கொரோனா தொற்று பரவல் தொடங்கிய நாட்களில் இருந்து இதுவரையில் 81இலட்சத்து 68 ஆயிரத்து 305 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2இலட்சத்து 28 ஆயிரத்து 453 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 71 இலட்சத்து 17 ஆயிரத்து 60 பேர் அதிகரித்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் 8இலட்சத்து 22 ஆயிரத்து 792 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதில் 2,300 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE