கவிஞர் முல்லையூரான்ஈழத்து  இலக்கியங்களில்  சமூக அவலங்களை  பெரிதும்  கவனத்திற் கொண்டு மனிதத்தின்  மேம்பாட்டுக்காய் எழுத்துருவாக்கங்களை  தந்தவர்  கவிஞர் முல்லையூரான் அவர்கள்.
 சிவராஜா முருகேசு  என்னும்  இயற்பெயரைக் கொண்ட  கவிஞர்  முல்லையூரான் அவர்கள்  கடலன்னையின்  அழகோடு  காடும்  காடு  சார்ந்த நிலமுமான முல்லைத்தீவு  வற்றாப்பளை யை பிறப்பிடமாகக் கொண்டவர்  முருகேசு சிவபாக்கியம்  ஆகியோரின்  மகனான  இவர்  வற்றாப்பளை  ரோமன் கத்தோலிக்க பாடசாலையில்  தனது  ஆரம்பக்கல்வியை  ஆரம்பித்து சாவகச்சேரி  இந்துக் கல்லூரி, ரிபேக் கல்லூரி,  யாழ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்  பழைய மாணவரும்  ஆவார்.  1984இல்  தாயகத்தை  விட்டுப் பிரிந்த  இவர்  1986 இல் இருந்து  டென்மார்க்  நாட்டில்  வாழ்ந்தவர். புலம்பெயர்ந்த  சில  ஆண்டுகள்  தன்னை  எழுத்துத்துறையில்  ஈடுபடுத்த முடியாமல்  இருந்த  அவர்  சிறிது  சிறிதாய்  தன்  மனநிலையை  மாற்றிக் கொண்டு  1993 இல் நிர்வாண விழிகள்  என்னும்  கவிதைத்  தொகுதியையும், காகம் என்ற  பெயரில்  ஒரு  மாத சஞ்சிகை யையும்  வெளியிட்டார்.  
அவரது  பல  படைப்புகள்  ஐரோப்பிய  வானொலி  நேயர்களின் நெஞ்சங்களை  தொட்டுள்ளன.  கவிஞர்  ஆட்கொள்ளும் கருப்பொருட்கள் சொற்கள்  அவற்றின்  கூர்மை  என்பன  நேயர்களையும்  வாசகர்களையும் பகுவாய்  கவர்ந்துள்ளன. அவரது  அனைத்து  படைப்புகளும்  நம் தாய் மண்ணோடு  உறவாடி  கொண்டிருக்கும்  என்பது  குறிப்பிடத்தக்கது.  துன்பத்தில்  வாடும்  உலகத்தோருக்காய்
அவரது  மனமும்  எழுது கோலும் அழும்.
கவிஞர்  அவர்கள்  தேன் தமிழோசை வானொலிக்காய் பல நிகழ்ச்சிகளை, ஆக்கங்களை  படைத்து  நமது வானொலி  தயாரித்தமை  இங்கே குறிப்பிடத்தக்கது.  அவருடைய முத்தான  நிகழ்ச்சிகளை  இங்கு  நீங்கள் கேட்கலாம்.

அருவுருவம்
யுத்த நாட்களில் நடத்தல்


அவர்களுடைய வாசல்