கட்டுரை

யாழ்ப்பாணப் பொது நூலகம்

யாழ்ப்பாண பொது நூலகம்

யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டிலிருந்து கட்டப்பட்டு வந்துள்ளது. சில நல்ல உள்ளங்களது ஆவண சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் மிகச்சிறந்த நூலகமானது. பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள், பழமையான பத்திரிகைகளின் மூலப் பிரதிகள், தனிப்பட்ட மற்றும் பொதுவான நூல்கள் போன்றனவும் அடங்கியிருந்தன. நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

1981ஜூன் முதலாம் தேதி இரவு  இந்நூலகம்  சிங்கள காடையர்களால் இந்நூலகம் எரிக்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது பலரினதும் அயராத உழைப்பினால் இந்நூலகம் நிமிர்ந்து நிற்கின்றது.